2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பொலிஸ் வேடமணிந்து கடற்படையினர் திருட்டு

Mayu   / 2024 ஜனவரி 04 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தையில் உள்ள தொலைபேசி நிலையமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து பணம் மற்றும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடிய நான்கு இலங்கை கடற்படை அதிகாரிகள் இன்று (04) அதிகாலை வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பத்தேகமவில் வசிக்கும் (38) வயதுடைய கடற்படை அதிகாரி, பொரலஸ்கமுவ நீலம்மஹரவில் வசிக்கும் (38) வயதுடைய அதிகாரி, (38) கொடகவெல ஹல்வின்னவில் வசிக்கும் (38) மற்றும் பிபிலவில் வசிக்கும் (37) வயதுடைய அதிகாரிகளே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவருவதாவது:

கடை உரிமையாளர் வெள்ளவத்தை பகுதியில் தொலைபேசி ஊடக மையம் ஒன்றை நடத்தி வருவதாகவும், நேற்றையதினம் (03) ஆம் இரவு இனந்தெரியாத நால்வர் பொலிஸ் அதிகாரிகளின் அடையாள அட்டையை காட்டி நிறுவனத்தை பரிசோதித்து கடையை திறக்குமாறு கூறியுள்ளனர். மேலும் கடையில் இருந்த 6,70 000 ரூபாய் பணத்தையும்  கடை ஊழியரின் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி என்பன எடுத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .