2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பொலிஸாரின் கழுத்தை நெரித்தவர் கைது

Janu   / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு காலிமுகத்திடல் சுற்றுவட்டாரத்திற்கு அருகில்வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள்  ஒருவரின் கழுத்தை நெரித்த ஒருவரை   கைது செய்துள்ளதாக  கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய  போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காலிமுகத்திடல் சுற்றுவட்டாரத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த போது பின்னால் வந்த சந்தேகநபர் பொலிஸ்  கான்ஸ்டபிளின்  கழுத்தை நெரித்துள்ளதாகவும் அதனால்   அவருக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சந்தேக நபரின் பிடியிலிருந்து அதிகாரியை விடுவித்து சந்தேக நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தியபோது குறித்த நபர் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர் என்று மருத்துவ அறிக்கையி மூலம் தெரிய வந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தெவாலபொல, பலபோவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .