2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு

Nirosh   / 2022 மார்ச் 30 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரவக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளம் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

மொரவக நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய இம்மாதம் 28ஆம் திகதி குறித்தப் பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை கைது செய்யப்பட்டப் பெண்  மொரவக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது இரவில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மொரவக அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மொரவக நீதவான் நிதிமன்ற நீதிபதி நீதவான் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, உயிரிழந்தவர் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார். 

மொரவகவைச் சேர்ந்த 36 வயதுடையப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாத்தளை வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பால் குறித்தப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X