2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

பெண் விபச்சார விடுதியில் மூன்று பெண்கள் கைது

Mayu   / 2024 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற போர்வையில், வீடொன்றில் விபச்சார விடுதியை நடத்தி சென்ற பெண் ஒருவர் உட்பட அந்த வீட்டில் இருந்த பெண்கள் மூவர், கல்கிஸை  குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் பிடியாணையின் பிரகாரம், கல்கிஸை பொலிஸ் பிரிவில், வெடி கந்த வீதி பிரதேசத்திலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அந்த விடுதியின் முகாமையாளரான பெண்ணுக்கு அப்பால், சேவையை வழங்கிய குற்றச்சாட்டில் அங்கிருந்த 25 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள், அனுராதபுரம், பாணந்துரை மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர் என பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .