2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் விசேட நடமாடும் சேவை

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சும், பதிவாளர் நாயகம் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விஷேட நடமாடும் சேவையொன்று நேற்று (12) புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது புத்தளத்தில் பிறப்பு , இறப்பு மற்றும் திருமண பதிவு இல்லாதவர்களுக்கு ஒரே நாளில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இங்கு முன்னெடுக்கப்பட்டன.

மேலும், சுமார்  45 வருடங்களுக்கும் மேல் சட்டரீதியாக திருமணப் பதிவு செய்துகொள்ளாமல்  வாழ்ந்த வயதோதிப குடும்பம் ஒன்றுக்கு இராஜாங்க அமைச்சர் அசோக பியந்த மற்றும் பதிவாளர் நாயகம் சமந்த விஜேசிங்க ஆகிய இருவரும் சாட்சிகளாக ஒப்பமிட்டு திருமணப் பதிவை பெற்றுக்கொடுத்தனர்.

குறித்த நடமாடும் சேவை மூலம் பிறப்பு , இறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ் இல்லாத 300 பேருக்கு மேற்படி சேவைகள் ஒரே நாளில் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இதேவேளை, பிறப்புச் சான்றிதழ் இல்லாத 14000 பேருக்கு விஷேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு நடமாடும் சேவை மூலமாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பியந்த இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .