2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

புதையல் தோண்டிய 9 பேர் கைது

Janu   / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - கற்பிட்டி தேதாவாடிய பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 9 பேர்  பொலிஸாரால் திங்கட்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரயும் ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மண்வெட்டி, கோடரி உள்ளிட்ட பொருட்களும், பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் இதன்போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தும்மலசூரிய மற்றும்  கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .