2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

Mayu   / 2024 ஜூலை 25 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

நீர்கொழும்பு - தடுகம களப்பு பிரதேசத்தில் இயந்திர படகுகளில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் புதன்கிழமை (24) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கு கடற்படை கட்டளையின் களனி கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமான ஆறு இயந்திர படகுகளை பரிசோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த ஆறு இயந்திர படகுகளிலும்  மறைத்துவைக்கப்பட்டிருந்த 76 உர மூடைகளில்  அடைக்கப்பட்ட 1,780 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பீடி இலைகள் கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆறு இயந்திர படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 இற்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் வென்னப்புவ, அளுத்குருவ ஆகிய பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட பீடி இலைகளும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் இயந்திர படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர்  தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .