2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பீடி இலைகளுடன் நால்வர் கைது

Janu   / 2024 மே 01 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 70  இலட்சம் ரூபாய் பெறுமதியான 1346 கிலோ கிராம்  பீடி இலைகளுடன் 4 சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கற்பிட்டி பொலிஸ்  நிலையத்திற்கு கிடைத்த  இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து சுமார் 70  இலட்சம்  பெறுமதியான 42 பொதிகளில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகள்,  இவற்றைக் கடல் மார்க்கமாக ஏற்றிச் சென்ற படகு, தரைவழி போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட  லொறி என்பன  கைப்பற்றப்பட்டுள்ளன. 

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய சாரதி, கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன், ஜனசவிபுர பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஆகியோரே  இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர் .

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .