2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று (10) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடற்படைத் தளபதியுடனான முதல் உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும். 

இந்த சந்திப்பின்  போது இருதரப்பு விவகாரங்கள் மற்றும் கடற்படைத் தளபதியின் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மட் சப்தர் கானும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .