2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

Freelancer   / 2023 நவம்பர் 21 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி இ.போ.ச பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து பயணித்த தம்பதியினர் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சீதுவை, அம்பலன்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை (20 ) காலை சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   கொழும்பு - சிலாபம் வீதியில் தன்டுகம விமானப்படை வீதித் தடைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் காயமடைந்த ஆண் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .