2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பஸ்கள் விபத்தில் ஒருவர் பலி: நால்வர் காயம்

Mayu   / 2024 ஜூன் 02 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் தனியார் பஸ் மோதி ஞாயிற்றுக்கிழமை (02)  காலை விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜ் ஜர்மல் ராஜ் ஆவார்.

கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பஸ், இ.போ.ச பஸ்ஸை  பாணந்துறை பேருந்து நிலையத்தை நோக்கி திரும்ப முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .