2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பஸ் விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயம்

Janu   / 2023 நவம்பர் 21 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - மாதம்பை பிரதேசத்தில் வீதியோரத்தில் பயணித்த சிறுமி உட்பட பெண்கள் மூவர் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (20)  இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த தனியார் பஸ்,  மாதம்பை பழைய நகரில் மற்றுமொரு பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது 3 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமி உட்பட பெண்கள் மூவரும் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மாதம்பை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

பெண்கள் மூவரில், வயோதிப பெண் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துச் சம்வத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி மற்றும் நடத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன். சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட  விபத்தால், சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஸீன் ரஸ்மின்

 

 

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .