2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

“நெஸ்லே” அகில இலங்கை ஓவியப் போட்டி நிறைவு

Janu   / 2023 ஜூலை 17 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஸ்லே  லங்காவின்  ‘எனது  பூமிக்கு  நல்லதை  செய்கிறேன்  - ஒரு ஓவிய வெளிப்பாடு என்ற  தொனிப்பொருளில்  அகில  இலங்கை பாடசாலைகளுக்கான  சுவரொட்டி  ஓவியப்  போட்டியானது நிறைவு பெற்றுள்ளது. 

பாடசாலை  மாணவர்களிடையே  நேர்மறையான  நடத்தை மாற்றத்தை  ஊக்குவிக்க  கல்வி அமைச்சு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையுடன்  கைகோர்க்கிறது.‘எனது பூமிக்கு நல்லதை செய்கிறேன்  - ஒரு ஓவிய வெளிப்பாடு’ (Doing good for the planet - an artistic representation)என்ற தலைப்பில் நெஸ்லே லங்காவின் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கான சுவரொட்டி ஓவியப்  போட்டியின்  உச்சக்கட்டமாக  கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளின் வெற்றியாளர்களுக்கு  விருதுகள்  வழங்கப்பட்டன.  பாடசாலைக் கழிவு முகாமைத்துவத்  திட்டத்தின்  இரண்டாம்  கட்டமாக,  கல்வி  அமைச்சு  மற்றும் மத்திய  சுற்றுச்சூழல்  அதிகாரசபை ஆகியவற்றுடன்  இணைந்து  உலக சுற்றுச்சூழல்  தினத்தை கொண்டாடும்  வகையில்  இரண்டு  மாதங்கள் நீண்டதாக  இந்தப்  போட்டி  ஏற்பாடு  செய்யப்பட்டது.  வலயம்,  மாகாணம் மற்றும்  அகில  இலங்கை  என  மூன்று  சுற்றுகளாக நடத்தப்பட்ட  இந்தப் போட்டி,  நாடு  முழுவதும்  உள்ள  பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களிடமிருந்து  60,000  நுழைவுகளை ஈர்த்தது.

“இலங்கையில்  பிளாஸ்திக்  மாசுபாட்டை  நிவர்த்தி  செய்வதில்  எமது உறுதியான  அர்ப்பணிப்புடன்,  எமது  பிளாஸ்திக்  பொதியிடலை  மீள்சுழற்சி செய்யக்கூடிய  அல்லது  மீளவும்  பயன்படுத்தக்கூடியதாக  மாற்று வதற்கும், கழிவுகளை  தரம்பிரித்து சேகரிப்பதை வலுப்படுத்துவதற்கும்,  நேர்மறையான நடத்தை  மாற்றத்தை  தூண்டுவதற்கும்  நாங்கள்  தொடர்ந்து  நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த  பயணத்தில்  ஒரு  முக்கியமான முயற்சியாக, இலங்கையின்  எதிர்கால  சந்ததியினர்  மத்தியில்  சிறந்த  பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதற்கும்,  நாட்டின்  நிலைபேற்றியல்  அபிவிருத்தியை  உறுதி செய்வதற்கும் முயற்சிக்கும்  பாடசாலை  கழிவு முகாமைத்துவ  நிகழ்ச்சித்திட்டம்  அமைந்துள்ளது.  இதன் பின்னணியில்  இந்த ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்ய உதவியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது வளரும் ஓவியர்களின் படைப்புத் திறன்களை  வெளிப்படுத்தும் தளமாக  மட்டுமல்லாமல்,  பசுமையான  மற்றும்  தூய்மையான  எதிர்காலத்தை  நோக்கி நடவடிக்கை  எடுக்க  வேண்டியதன்  முக்கியத்துவத்தை  வலுப்படுத்தவும் உதவியது. பங்கேற்பாளர்கள்  மற்றும்  வெற்றி  பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்று  நெஸ்லே  லங்காவின்  முகாமைத்துவப் பணிப்பாளர்  திரு  பெர்ன்ஹார்ட்  ஸ்டீபன் அவர்கள்  குறிப்பிட்டார்.

7  ஜூலை  2023  அன்று கொழும்பு  தேர்ஸ்டன்  கல்லூரியில்  சிறந்த  பத்து ஓவியர்களை  அங்கீகரித்து  கனிஷ்ட  மற்றும் சிரேஷ்ட  பிரிவுகளின் வெற்றியாளர்களுக்கு  விருது வழங்கும்  நிகழ்வு  நடைபெற்றது.  இந்நிகழ்வில் கௌரவ  கல்வி  அமைச்சரின்  அந்தரங்க  செயலாளரான  திரு. ஹேமாந்த பிரேமதிலக,  மத்திய  சுற்றுச்சூழல் அதிகாரசபையின்  தலைவர்  திரு.  சுபுன்எஸ். பத்திரகே  மற்றும்  இதில் கைகோர்த்துள்ள  நிறுவனங்களைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் , தேர்ஸ்டன்  கல்லூரியின்  அதிபரான திரு.  பிரமுதித  விக்கிரம சிங்க  உள்ளிட்ட அதிதிகள் கலந்து  சிறப்பித்தனர்.

“இந்தப்  போட்டியானது சந்தேகத்திற்கு  இடமின்றி  எமது இளம்  ஓவியர்களுக்கு சுற்றுச்சூழலைப்பேணுதல் மற்றும்  நிலை பேற்றியல்  ஆகியவற்றுக்கான அவர்களின் அர்ப்பணிப்பை  ஆக்கப்பூர்வமாக  வெளிப்படுத்தும்  ஒரு மிகச் சிறந்த தளத்தை வழங்கியுள்ளது.  இந்த  கூட்டாண்மையின்  ஒரு பகுதியாக இருப்பதில் கல்வி அமைச்சாகிய நாங்கள்  மிகவும்  மகிழ்ச்சியடைகிறோம். தமது ஓவியத்தின் மூலம், எமது  மாணவர்கள் தமக்காகவும்  எதிர்கால சந்ததியினருக்காகவும்  எமது  பூமியை  பேணிப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பை  வளர்த்து,  செயற்படுவதற்கு  மற்றவர்களை  ஊக்குவிப்பார்கள்,” என்று கௌரவ  கல்வி  அமைச்சரின்  அந்தரங்க செயலாளரான திரு. ஹேமாந்த பிரேமதிலக அவர்கள்  கருத்து  வெளியிட்டார்.

மத்திய   சுற்றுச்சூழல்  அதிகார  சபையின்   தலைவர்   திரு.  சுபுன்   எஸ். பத்திரகே  தனது  கருத்துக்களைப்  பகிர்ந்து கொள்கையில்,  “பிளாஸ்திக் மாசுபாடு தற்போது ஒரு பெரும் பிரச்சினையாக  இருப்பதால், ஓவியத்திறன் மூலம்  விழிப்புணர்வு  ஏற்படுத்த அடுத்த தலை முறை சுற்றுச்சூழல் ஆர்வலர்களை  ஊக்குவித்து , வழிகாட்டுவதை  நோக்கமாகக் கொண்டு ஒரு சிறந்த முயற்சியாக  இது  அமைந்துள்ளது.  இந்த  ஓவியப்  போட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான  ஆர்வத்தைத்தூண்டுவதற்கும்,  நமது  தேசத்திற்கு பசுமையான  மற்றும் வளமான  எதிர்காலத்தை வடிவமைக்கும்  நிலைபேற்றியல்  கொண்ட  மனப்பாங்கினை வளர்ப்பதற்கும்  உதவும்  என்பது எனது  திடமான  நம்பிக்கை," என்று குறிப்பிட்டார்.

இரண்டு பிரிவுகளின் வெற்றியாளர்களினதும் விபரங்கள் வருமாறு:

  - கனிஷ்ட பிரிவு: முதல் இடம் - செனுதி பஹன்மி, விஹார மகா தேவி பெண்கள் பாடசாலை,  இரண்டாவது  இடம் -  விஹங்க மியுரந்த வீரசிங்க,  ஸ்ரீ பியரத்ன மத்திய  மகா வித்தியாலயம்  மற்றும்  மூன்றாம்  இடம்  - கவித்மா  இந்துவரனி, மஹாமய பெண்கள் பாடசாலை

- சிரேஷ்ட பிரிவு: முதல் இடம் - சுமுது சந்தருவான், பமுனுகம மகா வித்தியாலயம், இரண்டாவது இடம் - கவிஷ நுகவேல, சீவலி மத்திய  கல்லூரி மற்றும் மூன்றாம் இடம் - ரஷ்மி ஷஷிகலா மதுவந்தி, தர்மாஷோக வித்தியாலயம்.

‘தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகள் என அனைவரதும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு  உணவின் ஆற்றலை வெளிக்கொண்டு வருதல்  என்ற  அதன்நோக்கத்தால் உந்தப்பட்டு,  நெஸ்லே நிறுவனம் இலங்கையில் தலைமுறை தலைமுறையாக  இளமை  முதல் முதுமை  வரை உயர்தர  உணவு மற்றும்  பான வகைகள் மூலம்  ஊட்டமளித்துள்ளது.  1906 ஆம் ஆண்டு இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து,  இன்று,  நெஸ்லே இலங்கை  மக்களின்  வாழ்க்கையின்  ஒரு  அங்கமாக மாறியுள்ளது. கடுமையான பாதுகாப்பு  மற்றும்  தரக் கட்டுப்பாடுகளைப்  பயன்படுத்தி, குருநாகலிலுள்ள தனது  அதிநவீன  தொழிற்சாலையில், இலங்கையில்  விற்பனை செய்யப்படும் 90 % க்கும் அதிகமான தயாரிப்புகளை  உற்பத்தி செய்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .