2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக இனேஷ் ஜயகுமார்

J.A. George   / 2023 ஜனவரி 17 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் பரப்புரைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளரர்களை நியமிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பிலுள்ள எதிர் கட்சி தலைவர் காரியாலயத்தில்  நடைபெற்றது. 

இதன்போது நுவரெலியா மாவட்டத்துக்கான கட்சியின் அமைப்பாளராக  இனேஷ் ஜயகுமார் நியமிக்கப்பட்டார். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ  நியமன கடிதத்தை வழங்கிவைத்தார். 

கடந்த அரசாங்கங்களில் பல முக்கிய பதவிகளை வகித்து வந்த இவர் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினருமாகிய அமரர் முத்து சிவலிங்கத்தின் மருமகன் ஆவார்.

அத்துடன், இவர் தேர்தல் பரப்புரைகள் தொடர்பான சிறப்பு தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்காவின் ஒரேகான் இலங்கை அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளராக இருப்பதுடன் அதனூடாக கடந்த வருடம் மாத்திரம் 194 கோடி ரூபாய் பெறுமதியான  அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசுக்கு வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .