Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Janu / 2025 ஜனவரி 02 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மக்கள் சக்தி புத்தளம் செயற்குழுவினரின் தலைமையில் புத்தளம் நகர சபை வட்டாரம் 04 நெடுங்குளம் வான் சந்தி குளத்துக் கட்டு நடைபாதையை சுத்தப்படுத்தி குளத்தில் வளர்ந்திருந்த புற்களை அகற்றும் சிரமதானத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக புத்தளம் நகர சபை செயலாளர் பிரீத்திக்காவை சந்தித்து புத்தளம் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.
இச்சந்திப்பின்போது, பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன, வான் சந்தி குளத்துக் கட்டு நடைபாதை பகுதியை அழகுபடுத்தல் மற்றும் ஔியூட்டல், நகர் தழுவிய குப்பை அகற்றும் பணிகளை மேம்படுத்தல், கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் நகர சபைக்கு சொந்தமான வளங்களை புனருத்தாபணம் செய்தல், பெண்களின் நலன்புரி முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் நகர சபை செயலாளரின் அக்கறையும் ஆர்வமும் இத்தருணத்தில் வெளிக்கொணரப்பட்டது.
இச்சந்திப்புக்கு தே.ம.ச. புத்தளம் நகர அமைப்பாளர் எம்.ஏ.எம். ரியாஸ், வட்டாரம் 04 நெடுங்குளம் அபிவிருத்தி செயற்குழு தலைவி சித்தி சலீமா, செயற்குழு உறுப்பினர் ஜே.எம்.ஏ. நபீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எம்.யூ.எம்.சனூன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago