2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தீக்காயங்களுக்குள்ளான பெண் உயிரிழப்பு

Freelancer   / 2023 நவம்பர் 05 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தேகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயார், உடலில் தீக்காயங்களுடன் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று  (05) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை மறவ இத்தேகடுவ பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.புஞ்சிமாணிக்க (83) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 30ம் திகதி வயல்வெளியில் ​​அடுப்பு பற்றவைத்தபோது உடலில் தீப்பிடித்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் பொலிஸாரின் விசாரணைகளில், தன்னுடைய கவனயீனம் காரணமாகத்தான் தீப்பற்றியுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். M 

சுமணசிறி குணதிலக்க
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .