2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தில்லி கலை இலக்கிய பேரவையின் சிறப்பு நிகழ்வுகள்

Editorial   / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் 27ம் திகதி புதன்கிழமை (27.12.2023) மாலை 5.00 மணிக்கு ' தமிழ் இளம் சமுதாயம் தத்தளிக்க காரணமாய் அமைவது சினிமா போதையே/  டிஜிட்டல் போதையே (சமூகஊடகம்)' எனும் பட்டிமன்ற நிகழ்வில் நடுவராக கலந்துகொள்ள  வழக்கறிஞரும், ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளரும் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளரும், தமிழ்தென்றல் முனைவர் எஸ்.டி கலையமுதன் (சேலம்)  இலங்கை வருகின்றார்.

சினிமா போதையே என்ற தலைப்பில் தனுஜா ராஜேந்திரம், கீர்த்திராஜ் அருள்செல்வன், சபிஷாந் மோகன் ஆகியோரும்  டிஜிட்டல் போதையே (சமூகஊடகம்) என்ற தலைப்பில அபிஷனா திருத்தணிசன், விதுர்ஷனா நித்தியராஜ், அபிலாஷ் விஜயகுமாரன் ஆகியோர் சொற்போர் நிகழ்த்துகின்றனர்.

யாழ்ப்பாண இந்திய துணை உயர்ஸ்தானிகர்  ராஜேஷ் நடராஜ் இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் சி.பி. கண்ணன்,  எஸ்.டி.கலையமுதன் ஆகிய இருவருக்கும் 29ம் திகதி வெள்ளிக்கிழமை (29.12.2023) உயர்ஸ்தானிகராலயத்தில் வரவேற்று கௌரவிக்கின்றார்.

சுழிபுரம் கலைமகள் இலவசக் கல்வி நிலையம் மற்றும் தில்லி கலை இலக்கிய பேரவை இணைந்து 30ம் திகதி (30.12.2023) மாலை 3.00 மணிக்கு வழங்கும் சிறப்பு பட்டி மன்றத்தில் சிறப்பு விருந்தினராக தில்லி கலை இலக்கிய பேரவையில் மூத்த ஆலோசகரும், குஜராத் வடோதரா தமிழ்சங்க தலைருமான சி.பி. கண்ணனும், நடுவராக தமிழ்தென்றல் முனைவர் எஸ்.டி கலையமுதன் கலந்து சிறப்பிக்கின்றனர்.

மாணவர்களிடையே பெருகிவரும் போதைபாவனைக்கு காரணம் குடும்பத்தின் கவனயீனமா? அல்லது  சமூகத்தின் நெறிபிறழ்வா? என்ற தலைப்பில் சிறப்புபட்டி மன்றம் நடைபெறஉள்ளது.

குடும்பத்தின் கவனயீனம் என்ற தலைப்பில் இராசகோபால் டனோஜினி, துரைசிங்கம் ஷசாந்தன், பன்னீர்செல்வம் பிரணவன், லக்சிகா சிவாஸ்கரன் ஆகியோரும் சமூகத்தின் நெறிபிறழ்வே என்ற தலைப்பில் இராஷசுந்தரம் வேணுஜன், சங்கவி பரம்சோதி, பரநிருபசிங்கம் பிரியங்கன், தங்கராசா நிலக்ஷன் ஆகியோர் வாதாடவுள்ளனர்.

30ம் திகதி (30.12.2023) மாலை 5.30 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்கா மணிமண்பத்தில் பகவான் ரமண மகரிஷியின் 144வது ஜெயந்தி தின நிகழ்வில் எஸ்.டி கலையமுதன் ஆன்மீக அருளுரை நிகழ்த்துகின்றார். இவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவிலும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வினை மொழிகள் துறை, இலங்கை சப்ரகமுவ பல்கலைகழக உறுப்பினர் சுதர்சனி நாகரத்தினம் அவர்களும், துரைசிங்கம் சுதர்சனும், இந்திய அயலக ஒருங்கிணைப்பாளரும், தில்லி கலை இலக்கிய பேரவை பொதுச்செயலாளருமான பா.குமார், பேரவையின் தலைவர் பா.அறிவழகன் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். இவர்கள் இந்நிகழ்வில் மக்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்விடுகின்றார்.

எச்.எச்.விக்கிரமசிங்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .