2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

திருடப்பட்ட தங்க நகைகளுடன் மூவர் கைது

Janu   / 2024 ஜூன் 30 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளின் , வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களில் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்க நகைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள், 2 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தின் உத்தரவில் தடுத்துவைத்து விசாணைக்கு உட்படுத்தப்பட்ட போதே திருடப்பட்ட தங்க நகைகள் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  நுரைச்சோலை, நாகொல்லாகம, தொரடியாவ, தெதிகம, கொஸ்வத்த ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களில் இவ்வாறு தங்க நகைகளை திருடியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு திருடப்பட்ட தங்க நகைகள் கண்டி, குருநாகல், கட்டுகஸ்தோட்டை, கேகாலை ஆகிய பகுதிகளில் உள்ள அடகு கடைகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .