2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

திடீரென தீ பற்றிய கார் முற்றாக சேதம்

Janu   / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸ பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை 07 நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த்தில் கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று  காரை நிறுத்தி விட்டு தனது நண்பர்களைச் சந்திப்பதற்குச் சென்று பின்னர் திரும்பி வரும்போது ​​ கார் சதுப்புநிலத்தில் சிக்கி  நகர்த்த முடியாத நிலையில் இருந்ததாகவும், காரை வேகமாக பின்னாடி எடுக்க முற்பட்டபோது காரின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு காரில்  முன்பக்கத்திலிருந்து திடீரென தீ பரவியதாகவும் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கார் முற்றாக எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .