2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

தாயிடம் கூறி உயிரை மாய்த்த குடும்பஸ்தர்

Janu   / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி அல்மனார் கடற்கரையின் காட்டுப் பகுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டியைச் சேர்ந்தவரும், கற்பிட்டி அல் மனாரில் வசித்து வந்தவருமான 33 வயதுடைய மொஹமட் றஸ்ஸாக் மொஹமட் பசால் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (20) இரவு தான் உயிரை மாய்த்துக்கொள்வதாக தனது தாயிடம் கூறி விட்டு சென்றதாகவும், தாயும் சகோதரரும் இரவு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் சென்ற நிலையில் புதன்கிழமை (21) காலை அல்மனார் கடற்கரையின் காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

இது தொடர்பில் கற்பிட்டி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .

எம்.யூ எம் சனூன்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .