2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

“ தலைவர் ரிஷாட்டின் தீர்மானத்தையே பலப்படுத்துவேன்”

Janu   / 2024 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரவளிக்கப் போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும் தலைமையின் தீர்மானத்தைப் பலப்படுத்துவதற்கு, சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

"எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலேயே நான் உள்ளேன். என்னை தேசியப் பட்டியலில் எம்.பியாக்கி, புத்தளம் மாவட்டத்தை கௌரவப்படுத்திய கட்சி இது. 

வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றி, புத்தளம் மாவட்ட மக்களை கௌரவப்படுத்திய எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் நேர்மையான அரசியல்வாதி. அவருக்குத் துரோகமிழைப்பது சமூகத்துக்கான சாபக்கேடாக அமையும். 

அதிகார ஆசைகளுக்காக கட்சி தாவியவர், அரசியலில் நிலைத்ததாக வரலாறே இல்லை. சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் இந்த ஜனாதிபதித் தேர்தலில், எமது கட்சியின் தலைவர் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளார். இத்தீர்மானத்தை நாம் பலப்படுத்த வேண்டும்.

தேர்தல் காலங்களில் இவ்வாறான வங்குறோத்து வதந்திகள் பரவுவது வாழமையே. ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார் .

எம்.யூ.எம்.சனூன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .