2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

தந்தையின் ஓய்வூதியத்தை பெற்ற மகன் கைது

Janu   / 2025 மார்ச் 19 , மு.ப. 10:46 - 0     - 20

இலங்கை நில அளவைத் திணைக்களத்தில்  பணியாற்றி, உயிரிழந்த  தந்தையின் ஓய்வூதியத்தை சட்டவிரோதமாக பெற்ற சம்பவம் தொடர்பாக  மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பிரதேச செயலகத்தில் இருந்து தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமையவே  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பாணந்துறை, வாலன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

 சந்தேக நபரின் தந்தை நாரஹேன்பிட்டி  நில அளவைத் திணைக்களத்தில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. அவர் உயிரிழந்த பின்னர் அவரின் மனைவி   ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் தனது தாயாருடன் கூட்டுக் கணக்கை ஆரம்பித்து ஓய்வூதியத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் தாயாரும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு  உயிரிழந்ததையடுத்து சந்தேக நபர் ஆறு லட்சம் ரூபாய்க்கு  மேல் மோசடியாக பெற்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X