2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

தந்தை செலுத்திய ஜீப் வண்டியில் மோதி சிறுவன் பலி

Janu   / 2024 நவம்பர் 11 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தந்தை செலுத்திய ஜீப் வண்டியில் மோதி மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானை - புகையிரத ஊழியர்களுக்கான வீட்டுத் தொகுதியை சேர்ந்த விஹங்க சத்சர என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின்  தந்தை ரயில் திணைக்களத்தில் சாரதியாக பணிபுரிவதோடு, ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் தந்தையின்  ஜீப் வண்டியை வீட்டின்  பின்பகுதிக்கு செலுத்திய போது  பின்னால் வந்த சிறுவன் மீது வாகனம் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X