2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ஜெஃப்ரி பாவா நடைமுறையின் தளபாடங்கள் ; கண்காட்சி கொழும்பில் ஆரம்பம்...

Janu   / 2025 பெப்ரவரி 05 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த இலங்கை கட்டடக்கலை வல்லுனர் ஜெஃப்ரி பாவா (1919-2003) அவர்கள் பிரதானமாக அவரது கட்டடக்கலை வல்லமை குறித்தே அறியப்பட்டாலும், தனது ஐந்து தசாப்த உழைப்பின் போது சமகாலத்து தளபாடவடிவமைப்புக்கள் பலவற்றையும் அவர் உருவாக்கியுள்ளார். தனிப்பயனாக்கம் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள தளபாட வகை குறித்து, “அந்த நேரத்தில் எது சரியெனத் தோன்றியதோ அதனை நாம் மேற்கொண்டோம்” என்ற அவரது கூற்று மிகவும் பிரபலமானது.

இந்த "தருணம்"நிகழ்வானது, மூடிய பொருளாதாரம், மட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதிகள், மற்றும் உள்நாட்டில் கிடைக்கப்பெறுகின்ற மூலப்பொருட்களின் சார்புநிலை என அப்போது காணப்பட்ட இலங்கையின் பின்னணியில் பாவா அவர்கள் உழைத்துள்ளதுடன், அதை எவ்வாறு அவர் முன்னெடுத்தார் என்பது குறித்த அரசியல், பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகளை தொகுத்து விபரிக்கின்றது. ஜெஃப்ரி பாவா அவர்களுடைய உழைப்பானது பெரும் எண்ணிக்கையான தளபாட வடிவமைப்புக்களை நமக்குத் தந்துள்ளதுடன், அதன் விளைவாக, விளக்குகள் மற்றும் கதிரைகள் என பலவற்றை நாம் அனுபவிக்கின்றோம். பாவா மற்றும் அவரது அணியினர் பல்வகைப்பட்ட உள்நாட்டு கைவினைஞர்களுடன் ஒன்றிணைந்து உழைத்துள்ளதுடன், அந்த நேரத்திற்குப் பொருத்தமான பாணிகளுடன், உற்சாகத்தையும், உணர்வையும் ஈர்க்கும் புத்தாக்கத்தை வெளிப்படுத்தி மகத்தான படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதில் ஒன்றுபட்டு உழைத்துள்ளனர். 

இந்த வடிவமைப்புக்கள் மீதான கவனம், மற்றும் பாவாவின் உழைப்பின் விசாலமான பின்னணியில் அவற்றின் வகிபாகம் ஆகியனவற்றைக் காணும் வாய்ப்பு தற்போது கொழும்பில் கிடைக்கின்றது. Design in the Moment: Furniture by the Geoffrey Bawa Practice, பாவா அவர்களின் தளபாட வடிவமைப்புக்களின் வரலாறு மற்றும் பின்னணியை நெருக்கமாக எடுத்துக் காட்டுவதுடன், சமகால பாவனைக்கு அவை எவ்வாறு அர்த்தமுள்ளவை என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை மற்றும் இந்தியாவைத் தளமாகக் கொண்ட தளபாட நிறுவனமானஃபாண்டம் ஹாண்ட்ஸ் (Phantom Hands) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த கண்காட்சி இடம்பெறுகின்றது. பிரபல கட்டடக் கலைஞரும், ஜெப்ரி பாவா அறக்கட்டளையின் தலைவருமான சண்ண தஸ்வத்த மற்றும் ஃபாண்டம் ஹாண்ட்ஸ் இணை ஸ்தாபகர் அபர்ணா ராவ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி, “Next-Door Café” கதிரை மற்றும் சவாரி (Saddle) கதிரை அடங்கலாக, தளபாட வடிவமைப்புக்களை மீள உருவாக்குவது குறித்த சிந்தனைகள் மற்றும் நடைமுறைகளை காண்பிக்கின்றது. ஃபாண்டம் ஹாண்ட்ஸ் இன் Geoffrey Bawa Collectionதளபாட வகையானது இந்த வடிவமைப்புக்களின் மீள்பதிப்புக்களை வழங்குவதுடன், கட்டடக்கலைஞரின் நடைமுறைக்கேற்றவாறு ஏனையவர்களின் படைப்புக்களையும் கொண்டுள்ளதுடன், இக்கண்காட்சியுடன் இணைந்ததாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 2025ம் ஆண்டு முதல் அவற்றை கொள்வனவு செய்யவும் முடியும்.      

க்கணத்தில் வடிவமைப்பு ஜெப்ரி பாவா நடைமுறையின் தளபாடங்கள் என்ற கண்காட்சி, 2024 டிசம்பர் 13 முதல் 2025 மே 31 வரை 42/1, ஹோட்டன் பிளேஸ்கொழும்பு 07 என்ற இடத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள Geoffrey Bawa Space மையத்தில் இடம்பெறும். Geoffrey Bawa Space ஆனது முக்கிய விடுமுறைகள் தவிரபுதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பி.ப 12 மணி முதல் பி.ப 6.00 மணி வரை திறந்திருக்கும். இவற்றைத் தயாரிப்பது குறித்த தொடர் விளக்கங்கள் மற்றும் பொது நிகழ்வும் இக்கண்காட்சியின் போது இடம்பெறும். கூடுதல் விபரங்களை geoffreybawa.com மற்றும் phantomhands.inமூலமாக அறிந்து கொள்ள முடியும். 

Phantom Hands குறித்த விபரங்கள்

Phantom Hands என்பது இந்தியாவின் பெங்களுரைத் தளமாகக் கொண்ட கைவண்ண மற்றும் வடிவமைப்பால் முன்னெடுக்கப்படுகின்ற தளபாட உற்பத்தி நிறுவனமாகும். 2014ம் ஆண்டில் அபர்ணா ராவ் மற்றும் தீபக் ஸ்ரீநாத் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்நிறுவனம், 20ம் நூற்றாண்டு பழமை மகிமைகளின் மீள்பதிப்புக்கள் மற்றும் புகழ்பெற்ற தளபாட மற்றும் புடவை வடிவமைப்பாளர்களின் ஒத்துழைப்புடன் படைக்கப்பட்ட சமகாலப் பொருட்கள் அடங்கலாக பலவற்றை இந்நிறுவனத்தின் தெரிவுகள் நமக்கு வழங்குகின்றன. பாரம்பரியமான கைவண்ண சமூகங்களின் திறன்மிக்க கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட Phantom Hands இன் தயாரிப்புக்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவில் முன்னணி வடிவமைப்பு காட்சியறைகள் மற்றும் தளபாட காட்சியறைகள் மூலமாக உலகெங்கிலும் கிடைக்கப்பெறுகின்றன.

ஜெப்ரி பாவா அறக்கட்டளை குறித்த விபரங்கள் 

கட்டடக்கலை, நுண் கலைகள், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் கற்கைகள் போன்ற துறைகளை மேம்படுத்தும் நோக்குடன், மறைந்த கட்டடக்கலைஞர் அவர்களால் 1982ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு, இலங்கையில் தொண்டு நிறுவனம் என்ற அந்தஸ்துடன் இயங்கி வருகின்ற, இலாப நோக்கற்ற ஒரு ஸ்தாபனமே Geoffrey Bawa Trust ஆகும். 2003ம் ஆண்டில் இக்கட்டடக்கலைஞர் காலமானத்தைத் தொடர்ந்து, விரிவுரைகள், அறிவியல் சுற்றுலாக்கள், புலமைப்பரிசில்கள், வதிவிடப் பயிற்சிகள் மற்றும் கண்காட்சிகள் என இலங்கையிலும், வெளிநாடுகளிலும் சூழல் மற்றும் கலைகள் மீது கட்டியெழுப்பப்பட்ட பரந்த சொற்பொழிவு ஈடுபாடுகளை உள்ளடக்கி, ஆண்டு முழுவதும் பல்வேறுபட்ட பொது நிகழ்வுகளை இந்த அறக்கட்டளை முன்னெடுத்து வருகின்றது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .