2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறைக்கு ஹெரோயின் எடுத்துச்சென்ற பெண் கைது

Mayu   / 2024 ஜனவரி 02 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவரிடம் ஹெரோயின் போதைப்பொருளை காற்சட்டையின் ஓரத்தில் மறைத்து கொண்டு சென்ற பெண்ணொருவரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்து  செய்துள்ளனர்.

வாத்துவ மொல்லிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கணவரை பார்க்க வந்த குறித்த பெண் காற்சட்டை ஒன்றை எடுத்து வந்ததாகவும், அதனை சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் சோதனை செய்த போது, ​​கால்சட்டையின் ஓரத்தில் 440 மில்லிகிராம் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .