2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

’சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும்’

Editorial   / 2022 ஏப்ரல் 22 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை மாற்ற வேண்டும் . சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகள் மூலமோ இந்த நிலைமையை மாற்ற முடியாது எனவும் அறிவு ரீதியாக அனைவரும் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும் எனவும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் கண்டி மாநகர சபை ஒருங்கிணைப்பாளர் எம் . தீபன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மேலும் எமது நிலை உணர்ந்து நிதி உதவிகளை வழங்கி வருகின்ற இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் . 

எமது நாடு பொருளாதார ரீதியில் ஒர் இக்கட்டான நிலையை எட்டியிருக்கின்ற வேலையில் அதற்கெதிரான மக்களது அதற்கெதிரான மக்களது கோப வெளிப்பாடுகள் ஆர்ப்பட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இத்தகைய ஆர்ப்பட்டங்கள் நிகழ்வுகளை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது . 

எரிபொருள் , எரிவாயு , மின்சாரம் போன்ற தேவைகள் தடைப்பட்டுள்ளன பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . 

தமிழ் , முஸ்லிம் , சிங்கள மக்கள் அனைவரும் ஒன்று பட்டு உழைப்போம். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து எமது தாய் மண்ணை மீட்டெடுப்போம் சகல மக்களும் சரி நிகர் சமன் என்ற நீதியை உருவாக்குவோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X