2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிங்கள- தமிழ் இலக்கிய உறவினை பேணும் உறவுப்பாலம் மலரன்பன்

Mayu   / 2023 டிசெம்பர் 21 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 “மலையகநாட்டைச்சேர்ந்தமாத்தளைமூதூர்வாழும்

 தலையகப்பிறையினார்தஞ்சக்தியாம்முத்துமாரிக்

 குலமகள்தனக்கோரின்பக்குறவஞ்சிதமிழிற்பாட

மலைமகள்தனக்குமூத்தமகன்கரிமுகவன்காப்பே”

என்று மாத்தளையில் வாழ்ந்த நவாலியூர் சு.சொக்கநாதன் அவர்கள் இயற்றிய “மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சி” (1993) என்ற கவிதை நூலை அமரர் கலைஒளி முத்தையா பிள்ளை நினைவாக மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அறங்காவலர் சபைத் தலைவர் அமரர் த. மாரிமுத்து செட்டியார் முன்னிலையில் வெளியிட்டு, இன்று முப்பது ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. குறவஞ்சியை வாசித்த மாத்தளை வாசகர்கள் கவிஞர் வி.கந்தவனம் அவர்களின் ‘ஏனிந்தப் பெருமூச்சு’, முக்கவிஞர் வெளியீடான ‘சிட்டுக்குருவி’ போன்ற கவிதை நூல்களைத் தேடி வாசித்தது என் நினைவிற்கு  வருகின்றது என எச்.எச். விக்கிரமசிங்க தெரிவித்தார். 

1960களின் முற்பகுதியில் கவிஞர் வி.கந்தவனம், கவிஞர் நவாலியூர் சொக்கநாதன், கவிஞர் ஈழவாணன் மாத்தளையில் வாழ்ந்த காலம் மலையக இலக்கியத்தின் பொற்காலமாகும். மாத்தளை புனித தோமையார் கல்லூரியில் பணியாற்ற வந்துசேர்ந்த கவிஞர் வி.கந்தவனம், மலையகத்தில் முதன்முதலாக மாத்தளையில் க.பொ.த. உயர்தர வகுப்பினை ஆரம்பித்து, முதற் தடவையாக மாத்தளையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுப்பியமைக் குறிப்பிடத்தகும்.

 இவ்வாண்டில் கலைஒளி முத்தையா பிள்ளை அவர்களின் புதல்வர் மு. நித்தியானந்தனின் ‘பெருநதியின் பேரோசை’ (2023) என்ற நூலை நாம் வெளியிட்டோம். மாத்தளை பெ.வடிவேலனின் ‘வல்லமை தாராயோ?’ என்ற சிறுகதைத் தொகுப்பும் கலைஒளி முத்தையா பிள்ளை ஞாபகார்த்தக் குழுவின் வெளியீடேயாகும். எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரித் தாளாளர் குமார் ராஜேந்திரன் அவர்களின் ‘தாய்’ வெளியீட்டின் ஒரு லட்சம் ரூபாய் பரிசைப் பெற்று அந்நூல் பெரும் பாராட்டைப் பெற்றது.

அந்த வரிசையில் நோர்த் மாத்தளையில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வரும் மலரன்பனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை ‘கொலுஷா’ என்ற தலைப்பில், அவரது 80வது பிறந்ததினப் பரிசாக இது இவ்வாண்டு வெளியிடுகிறோம். ‘கொலுஷா’ ரஷ்யாவின் எழுத்துலக மேதை மெக்சிம் கோர்க்கியின் சிறுகதையின் தலைப்பாகும். உலகச் சிறுகதைகளையும் சிங்களச் சிறுகதைகளையும் தாங்கி, பதினான்கு கதைகளைக் கொண்ட இந்த நூல் சிங்கள மொழியிலிருந்து தமிழில் மலரன்பனால் மொழிபெயர்க்கப்பட்டது என்பது சிறப்புக்குரியதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .