Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Janu / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் பெறுமதியுடைய, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புதன்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த, பொல்கஹவெலவைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பெண், வௌிநாடு செல்ல முன்பாக விவசாயத் துறையில் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளராகப் பணியாற்றியமை தெரியவந்துள்ளது.
28,800 வெளிநாட்டுத் தயாரிப்பு "பிளாட்டினம்" சிகரெட்டுகள் அடங்கிய 144 சிகரெட் அட்டைப்பெட்டிகளை அவரது பயணப் பையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பெண் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மார்ச் 05 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டீ.கே.ஜி. கபில
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago