2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

சாதனை ஏற்றம்

Janu   / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிபுணத்துவமிக்க வழிகாட்டியான அயெஷ் புத்திகவும், மலையேற்றச் சாதனைகளை புரிபவரான மிச்செல்லி பின்கொவ்ஸ்கியின் சாதனை நேரத்தில் இலங்கையின் அடையாளமான நெடுந்தூர மலையேற்றப் பாதையான பீகோயிப் பாதையைக் கடந்துள்ளனர். 323 கிலோ மீற்றர் தூரத்தையும், 11,000 மீற்றருக்கும் அதிகமான உயரமும் கொண்ட முழு 22 கட்டங்களை வெறும் 10 நாள்களில் கடந்துள்ளனர். இதை அடைய வழமையாக மலையேறுபவர்களுக்கு வாரங்கள் செல்லும்.

தற்போது உலகத்தில் சில டசின் கணக்கானோர் மாத்திரமே இப்பாதையை பூர்த்தி செய்துள்ளனர். அறியப்பட்ட வேகமான நேரமாக அல்ராமரதன் பாதை ஓட்ட வீரரான ஹையுன் சங் சுங் தனது ஓட்டத்தை வெறும் 59 மணித்தியாலங்களில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி பூர்த்தி செய்திருந்தார். முன்னதாக இச்சாதனையை இலங்கையின் நன்கு அறியப்பட்ட மலையேற்ற வீரரான ஜோன் பீரிஸ் வைத்திருந்தார். அவர் மலையேற்றத்தை 13 நாள்களில் கடந்திருந்தார்.

அயெஷ், மிஷெல்லியும் குறித்த வேகமான மலை ஏற்றத்தை இணைந்து வடிவமைத்து பீகோயி பாதை நிறுவனத்தை அறியச் செல்லும் பொருட்டும், நிதி சேகரிக்கும் பொருட்டே மேற்கொண்டிருந்தனர். இந்நிறுவனமே இப்பயணங்களை ஒழுங்கமைக்கிறது.

அனுமதி பெற்ற வழிகாட்டியான அயெஷ் மாத்திரமே இப்பயணத்தை மூன்று தடவைகள் பூர்த்தி செய்துள்ளதுடன், மிஷெலி மாத்திரமே இப்பயணத்தை இரண்டு தடவைகள் பூர்த்தி செய்த ஒரேயொரு பெண்ணாவர்.

பாதையின் நோக்கு

இலங்கையின் மத்திய மலைநாட்டின் கலாசார செழிப்புகளையும், இயற்கை வனப்பையும் காண்பிப்பதற்காகவே பீகோயி மலை ஏற்றமானது உருவாக்கப்பட்டுள்ளது. 300 கிலோ மீற்றர் இப்பாதையானது 22 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன்  தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த பைன் மற்றும் யூக்கலிப்ட்ஸ் காடுகள், மழைக் காடுகளை உள்ளடக்கியுள்ளது. ஹந்தனவிலிருந்து ஆரம்பித்து நுவரெலியா பெட்ரோ எஸ்டேட்டில் முடிவடைகிறது.

சமூகங்களுக்கான உயிர்நாடி

பீகோயி பாதையிலுள்ள சமூகங்களுக்கு இம்மலையேற்றமானது உயிர்நாடியாகக் காணப்படுகின்றது. இச்சமூகங்களானவை சிறு வர்த்தகங்கள், தேயிலைக் கொழுந்து பறிப்பு, உள்ளூர் கைப்பொருள்களிலேயே தங்கியுள்ளது.

தங்களது பயணத்தின்போது அயெஷ், மிஷெல் ஆகியோர் உள்ளூர்வாசிகளுடன் பயன்தரக்கூடிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், சிறு கிராமக் கடைகளில் விநியோகங்களைக் கொள்வனவு செய்ததுடன், குடும்பங்களால் நிர்வகிக்கப்படும் உணவகங்களில் உணவு உட்கொண்டிருந்தனர்.

தேசிய மற்றும் உலகப் பொக்கிஷம்

தேசிய புவியியல் பயணி, கொன்டே நாஸ்ட் பயணி, பயண எழுத்தாளர்கள் பிரித்தானியச் சங்கத்தில் பீகோயி பயணமானது விருதுகளை வென்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X