2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

சமூக சேவையாளருக்கான விருது வழங்கல் விழா

Editorial   / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் 2022 அக்டோபர் மாதம் இலங்கையை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருட காலமாக இயங்கி வருவதுடன், இலங்கையில் ஏறத்தால 10 மாவட்டங்களில் 900 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

இவ்வமைப்பானது இன, மத, எவ்வித பேதமின்றி சமூக சேவையினை எவ்வித எதிர்பார்ப்புமின்றி எவ்வித கொடுப்பனவுமின்றி சுயமாக Dr Rizwan Cassim பணிப்பின் பெயரில் செய்து வருகின்றது, இவ்வமைப்பின் நோக்கம் தனிமனித உரிமை மற்றும் சமூக சேவை மாத்திரமாகும்.

2025. 02. 09ம் திகதி கொழும்பு 10 மாளிகாவத்த செரண்டிப் ஹோட்டலில் சிறந்த சமூக சேவையாளருக்கான விருது வழங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டு கெளரவிப்பு நடைபெற்றது.

இவ்விழா சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  தேசபந்து D.R ரிஷ்வான் காசிமால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

இதில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொண்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .