2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

“சக்தி கிரவுன்’’ இறுதி போட்டியாளர்களின் ஒப்பந்தம்

Janu   / 2024 செப்டெம்பர் 09 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இசைத்துறைக்கு மிக முக்கிய பங்களிப்பை செய்து வரும் சக்தி தொலைக்காட்சி, இளம் இசை திறமைகளை கண்டறிய பல்வேறு நேரடி நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றதுடன் இந்நிகழ்ச்சிகள் மூலம் வெளிவந்த பல இளைஞர்கள், இலங்கையின் இசைத்துறையின் முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றனர்.

சக்தி தொலைக்காட்சி, திறமையின் தேடல் நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, புதிய இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் 'பாட்டு பாடவா', 'இளையகானம்', 'சக்தி ரேடியோ சூப்பர் ஸ்டார்', 'சூப்பர் ஸ்டார்', 'இசை மகா யுத்தம்', 'சக்தியின் இசை இளவரசர்கள்', 'சக்தி குளோபல் சூப்பர் ஸ்டார்', 'சக்தி ஜூனியர் சூப்பர் ஸ்டார்' ஆகிய நிகழ்ச்சிகள் புகழ்பெற்றதுடன் தற்போது அந்த பட்டியலில் "சக்தி கிரவுன்" நிகழ்ச்சியும் இணைக்கப்பட்டுள்ளது.   

அண்மையில் நடைபெற்ற "சக்தி கிரவுன்"இறுதிசுற்றுக்கு ஆறு போட்டியாளர்கள்   தேர்வாகியிருந்தனர். இவர்களில் கண்டியைச் சேர்ந்த பிரணவி  வெற்றியாளராக கிரீடம் சூடினார் .

இறுதிப் போட்டியில் பங்கேற்ற அறுவர் , தமது சொந்த பாடல்களை நிகழ்ச்சியின் மேடையில் பாடினர். இந்த பாடல்கள், M Entertainment நிறுவனம் மூலம் உலகளாவிய அளவில் வெளியிடப்படவுள்ளதுடன் இதற்கான ஒப்பந்தம், 2024 செப்டம்பர் 5ஆம் திகதி  இரத்மலானை ஸ்டெயின் கலையகத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் இலங்கையின்  ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகப்பிரபலங்கள்  கலந்து கொண்டனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .