2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

சக்கர கதிரையில் வந்தவரிடம் ‘குஷ்’

Mayu   / 2024 நவம்பர் 10 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிகேஜி கபில

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சக்கர கதிரையில் பயணித்த "கிரீன் சேனல்" ஊடாக வெளியேற முற்பட்ட வயோதிப பயணி ஒருவர்  ஞாயிற்றுக்கிழமை (09) சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் 58 வயதுடைய கொழும்பு - 10, மருதானை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து AirAsia விமானமான FD-047 இல் 10.25 மணியளவில் நாட்டை வந்தடைந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், சக்கர நாற்காலியில் அமர்ந்து விமான நிலைய சுங்க வளாகத்தின் பச்சைப் பாதையில் இலங்கை துணை அதிகாரி உதவியோடு சென்றுகொண்டிருந்த போது, ​​அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவரின்  பையில் 05 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்ட பயணி மற்றும் அவர் கொண்டு வந்த குஷ் போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X