2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கொழும்பு குடிநீர்: சபை விளக்கம்

Editorial   / 2024 ஜூன் 12 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முறையான சுத்திகரிப்பு நடவடிக்கையின் பின்னரே மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாக அதன் உதவி பொது மேலாளர் ஏ.பி.ஆர்.ஜே. விஜேசிங்க குறிப்பிட்டார்.

“சுத்திகரிப்புக்கு பின்னர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புக்கு வழங்கப்படும் தண்ணீர் தொடர்ந்து ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றது. பரிசோதனை முடிவுகளின்படி நுண்ணுயிரியல் சோதனைகள் மற்றும் அனைத்து இரசாயன சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை தரநிலையில், எந்த விதமான நோய்க்கிருமிகளும் இல்லை எனவும், வெள்ளத்தில் எந்த தண்ணீர் வந்தாலும் அதற்குரிய துப்புரவு பணிகளை செய்து தரமான குடிநீரை தேசிய நீர் வழங்கல் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது எனவே வீண் அச்சத்தை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .