2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்கியர் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 31 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை தல்தென பகுதியில் அமைந்துள்ள சிறுவர் புனர்வாழ்வு சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கெட்டகொட , புஸ்ஸலாவ தல்தென, பதுளை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பதுளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குறித்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து 1430 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 570 மில்லி கிராம் ஹேஸ் போதைப்பொருள், 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 10 போதை மாத்திரைகள்  மற்றும் 19 மில்லி கிராம் புகையிலை ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் கொழும்பு கிரேண்ட் பாஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் தந்தை தன்னிடம் குறித்த போதைப்பொருட்களை கொடுத்ததாகவும் கைதிகள் வேலை நிமித்தம் வெளியே வரும் போது அவர்களிடம் சூட்சுமமான முறையில் கொடுப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பதுளை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .