2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது

Mayu   / 2024 நவம்பர் 19 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு   உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து  மன்னார்  தள்ளாடி சந்திக்கு அருகில்  மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத் தர்களால் கேரள கஞ்சா பொதியுடன்  திங்கட்கிழமை (18) இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 04 கிலோ 315 கிராம்  எடை கொண்ட கேரள கஞ்சா பொதி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் L.Y.A.S.சந்திரபால வின் பணிப்பில்,பொலிஸ் அத்தியட்சகர் (1)H.M.C.P.கேரத் இன் வழி காட்டலில் மன்னார் மாவட்ட குற்றதடுப்பு  தற்காலிக பொறுப்பதிகாரி உ.பொ.ப .பத்ம குமார,பொ.சா.36501 ரத்ன மணல தலைமையிலான அணியினரே மேற்படி  கேரளா கஞ்சா மற்றும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்து உள்ளனர்.

சந்தேகநபர் கள்ளி கட்டைகாடு பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என  தெரிய வந்துள்ளது.

மன்னார் பொலிஸாரின் விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஆர்.லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X