2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

’’குளிரும் தேசத்துக் கம்பளிகள் ’’ : புத்தக வெளியீட்டுவிழா

R. Yasiharan   / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சதீஸ் செல்வராஜா எழுதிய "குளிரும் தேசத்துக் கம்பளிகள்" புத்தக வெளியீட்டுவிழா எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பி.ப 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

2022 தமிழ்நாடு - புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்  அரசியல், சமூகம், வரலாறு, கல்வி மற்றும்  அறிவியல் சார்ந்த கட்டுரையில் “குளிரும் தேசத்துக் கம்பளிகள் ” விருது வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் அவர்களின்  தலைமையில் நடைபெறும் விழாவில் எழுத்தாளர்கள், சிரேஷ்ட ஊடக பிரதிநிதிகள் மற்றும் கௌரவ அதிதியாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .