Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Editorial / 2025 மார்ச் 09 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதாரத் துறையில் ‘கிளின் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் ஒரு தேசிய வழிகாட்டுதல் குழுவை நிறுவியுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க தலைமையிலான இந்தக் குழுவில், சுகாதார அமைச்சிலிருந்து 37 உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளனர்.
‘கிளின் ஸ்ரீலங்கா’ திட்டத்தை சுகாதாரத் துறையில் திறம்பட செயல்படுத்துவதற்குத் தேவையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பற்றி விவாதிப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும் இந்தக் குழு காலாண்டுக்கு ஒருமுறை கூடவும் தீர்மானித்துள்ளது.
குழுவால் தயாரிக்கப்பட்ட காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன.
இந்தக் குழுவின் நோக்கங்கள், சுகாதார சேவைகளின் முக்கிய அம்சங்களான தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் நிதியளிப்பை வலுப்படுத்த தேசிய அளவில் கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குவதும்,‘கிளின் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து சுகாதாரத் துறையில் அவற்றை திறம்பட செயல்படுத்துவதும், அந்தக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்துவதை ஒருங்கிணைத்து கண்காணிப்பதும் ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
9 hours ago