2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

காட்டு யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

Janu   / 2023 நவம்பர் 19 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருவலகஸ்வெவ  - தேவநுவர கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை (17) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவ , தேவநுவர பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய டபிள்யூ. நிக்கோலஸ் பெரேரா எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டை விட்டு வெளியே சென்ற போது, காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், அதன் பின்னர் உறவினர்கள் அவரின் சடலத்தை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்த நபரின் வீட்டுக்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரனையின் அதிகாரி, மரண விசாரனையை மேற.கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில்  கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .