2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கர்ப்பிணியை முட்டித்தள்ளிய சாரதி

Janu   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளத்தில்  இடம்பெற்ற வீதி விபத்தில்  மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த புத்தளம் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் ஐந்து மாதக் கர்ப்பிணி இளம் தாதியொருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணி நிமித்தமாக வீட்டில் இருந்து சனிக்கிழமை (30) மாலை வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த குறித்த கர்ப்பிணித் தாதி,  பாதசாரி கடவையில் பயணித்த போது அதி வேகமாக வந்த முச்சக்கர வண்டி ஒன்று அவர் மீது மோதியதில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட  விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் தாதி புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  பின் அதிக உள் இரத்தப்போக்கு காரணமாக அவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய அதிக மதுபோதையில் இருந்த ஓட்டோ சாரதியை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .