2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

கட்டுநாயக்கவில் நால்வர் கைது

Mayu   / 2024 ஜூலை 28 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் 1 கோடியே 37 இலட்சத்து 765 ரூபா பெறுமதியான 461 சிகரெட்டு பண்டல்களுடன் பிரவேசிக்க முயன்ற வெளிநாட்டு பெண் உட்பட நால்வர்  கட்டுநாயக்க  விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்வர்களில், 37 வயதுடைய சீனப் பெண் ஒருவர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சனிக்கிழமை (27) நள்ளிரவு 12.00 மணியளவில் MH-179 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரும் மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய சாரதி ஒருவரும் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கொழும்பில் கிளப் ஒன்றில் பணிபுரியும் பெண்ணொருவரும்  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 29,200 சிகரெட்டுகள் அடங்கிய 146 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை தனது பயணப் பையில் மறைத்து வைத்திருந்த போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டி.கே.ஜி கபில


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X