Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 09 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலைத்திற்கு பிரித்தானிய பிரஜை ஒருவர் கஞ்சாவை கொண்டு வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது பிரித்தானிய பிரஜை நேற்றைய தினம் (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பிரித்தானியர் 53 வயதுடையவர் எனவும் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 08 பொதிகளில் வைக்கப்பட்டிருந்த 40 கிராம் கஞ்சா மற்றும் 58 கஞ்சா விதைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய பிரஜை எதிர்வரும் மார்ச் மாதம் வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும், கஞ்சா விதைகளை பயிரிட்டு குடிப்பதற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு, இந்த பிரித்தானிய பிரஜை இலங்கைக்கு வந்து தங்காலை பகுதியில் தங்கியிருந்த போது 700 கிராமுக்கு அதிகமான “குஷ்” கஞ்சாவுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டார்.
பிரித்தானிய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் இன்றைய தினம் (09) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிகேஜி கபில
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
16 minute ago
21 minute ago