Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 ஜூன் 26 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச பிரிந்த ஆத்மாக்கள் தினம் கொண்டாடப்பட்ட வேளையில் மனிதனுக்கு சேவை செய்வதே மனிதனின் இறுதிக் கடமையாகும் என்ற தொணிப் பொருளுக்கு இணங்க இரவு பகல் பார்க்காது எந்த சந்தர்ப்பத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் செய்திகளை சேகரித்தல் மற்றும் அதனை மக்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்கும் ஊடக நிறுவனங்களின் பணியாற்றல் மற்றும் பொறுப்புக்களில் ஈடுபட்டுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் மதிப்பு நிறைந்த விஷேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு சர்வதேச பிரிந்த ஆன்மாக்கள் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா மனித உரிமைகள் அமைப்பில், இலங்கை மன்றக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (25) காலை 08 தொடக்கம் மதியம் 12 மணிவரை கொழும்பு 7,நடைபெற்றது.
மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் M.N.M அஷீம் ஏற்பாட்டால் ஒழுங்குச் செய்யப் பட்டிருந்ததுடன் இந்த நிகழ்வில் பல பிரபல அதிதிகள் வரவழைக்கப் பட்டு ஊடகவியளாலர்களுக்கு பயன் பெறும் வகையில் இந்த நிகழ்வு மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இதில் பிரதான அதிதியாக கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கித்சிரி ராஜபக்ஷ கலந்து கொண்டார் .
முக்கியமாக இந் நிகழ்வின் மிக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிறப்பான ஊடகவியலாளர்களுக்கான ஒரு நிகழ்வொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதி கொழும்பில் இடம்பெற இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago