2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

உள்ளூராட்சித் தேர்தல்கள்;மேலும் 2 முறைப்பாடுகள் பதிவு

Editorial   / 2025 மார்ச் 25 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களை முன்னிட்டு, பொலன்னறுவை மற்றும் மாத்தளை பகுதிகளிலிருந்து திங்கட்கிழமை (24)  தேர்தல் தொடர்பான இரண்டு (02) முறைப்பாடுகளை இலங்கை பொலிஸ் பெற்றுள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள, அதே நேரத்தில் தேர்தல் வன்முறை தொடர்பான எந்த முறைப்பாடும் பதிவாகவில்லை.

பொலன்னறுவை சிறிபுர பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முகப்புத்தகத்தில் ஒரு காணொளி பரப்பப்பட்டுள்ளதாகக் கூறி முறைப்பாடு அளித்துள்ளார். 

மாத்தளை, மஹாவெல பகுதியில் ஒரு வேட்பாளரின் அதிக எண்ணிக்கையிலான கட்அவுட்கள் காட்சிப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X