2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

உயிலங்குளம் விபத்தில் - மூவர் காயம்

Mayu   / 2024 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னார் உயிலங்குளம் பகுதியில் பட்டாரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தானது செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.


 
மன்னார்- மதவாச்சி பிரதான வீதி ,உயிலங்குளம் பகுதியில் நேர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியதில்  மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனத்தில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் காயமடைந்தவர்கள்  மன்னார்  பகுதியைச்  சேர்ந்த இருவரும் மாந்தை மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .