Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 24 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் பிரதிநிதித்துவம் எனக்கூறிக்கொண்டு இளைஞர்கள் பலரும், கம்பஹாவுக்கு படையெடுத்துள்ளனர். ஆகையால், தமிழர்கள் இம்முறையும் ஏமாந்துவிடாமல், உங்களில் ஒருவனை அனுப்புவதன் ஊடாக, சேவைகளை பெற்றுக்கொள்ளுங்ள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் சசிகுமார் சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.
கொழும்பில், ஊடகவியலாளர்களை, புதன்கிழமை (23) சந்தித்து கருத்துரைத்த அவர், 2011 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த நான், 2014 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக ஐக்கிய மக்கள் கட்சியின் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டு 23000 வாக்குகள் பெற்றேன்.
அரசியல் பயணத்தில், வத்தலை நகர சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். அதன் மூலம் பல சேவை மக்களுக்கு செய்தேன். கடந்த பாராளுமன்ற தேர்தலிலே போட்டியிட்டேன். அன்று கம்பஹா மாவட்டத்தில் ஒரு லட்சம் தமிழ் வாக்குகள் இருந்தன. எனினும், 23,000 வாக்குகள் மாத்திரம் பெற்றேன் அனைவரும் எனக்கு வாக்களிக்கவில்லை.
கடந்த காலங்களில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. அதுபோன்று இல்லாமல் இந்த முறை தமிழ் வாக்குகள் சிதறிக்கப்படாமல் மக்கள் ஒன்று சேர்ந்து நல்ல தீர்மானத்தை எடுக்கவேண்டும்.
மக்களே சிந்தியுங்கள்‘ உங்களில் ஒருவர் பாராளுமன்றச் சென்றால்தான் உங்களின் பிரச்சனைகளை தீர்க்கலாம். உங்களின் வாக்குகளை சரியான முறையில் அளியுங்கள். இளைஞர்களின் இன்று விலை போகிறார்கள். எனினும், நன்றாக சிந்தித்து உங்களை வாக்குகள் அளியுங்கள்.
இளைஞர்களே! நான் சரியா? இல்லையா? அல்லது எனது பின்புலத்தை தேடி பார்த்து சிந்தித்து உங்கள், வாக்குகளை எனக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இதனூடாகவே, கம்பஹா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும். என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago