2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஈரமான பீடி இலைகள் மீட்பு

Janu   / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி - கீரிமுந்தல் களப்பு பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இச் சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் கீரிமுந்தல் களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான 8 மூடைகள் காணப்பட்டுள்ளதுடன், அந்த மூடைகளை சோதனையிட்ட போது அதிலிருந்து    465 கிலோ கிராம் ஈரமான பீடி  இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .