2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

இலங்கை விமானப்படையினரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டம்

J.A. George   / 2022 மார்ச் 07 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படையின் 71 வது  வருட நிறைவை முன்னிட்டு   இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டலின்கீழ் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

3000 ஆயிரத்துக்கும் அதிகமான  விமானப்படை அங்கத்தவர்களின் பங்கேற்பில் கடந்த  05ஆம் திகதி கொழும்பு  மற்றும் அதனை அண்டிய பகுதிகள் மற்றும் பொது இடங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

டெங்கு பரவலை தடுத்து சுற்றுசூழலை தூய்மைப் படுத்துவதே இதன் பிரதான நோக்கம் ஆகும்.  இதற்கான ஏற்பாடுகளை இலங்கை விமானப்படை தரைவழி செயற்பாட்டு பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல்  ஜனக அமரசிங்க ஒருங்கமைத்து  செயற்படுத்தினார்.

இதன்போது   கொழும்பு மத்திய பேருந்து நிலையம்,  குணசிங்கபுர பேருந்து  நிலையம் ,  பெஸ்தியன்  மாவத்தை பேருந்து  நிலையம் , பிரிவு 2 கோட்டை ரயில் நிலையம், பிரிவு 3, மருதானை ரயில் நிலையம், பொரளை பொது மயானம், பிரிவு 4 கங்காராம விகாரைக்கு  அருகில் உள்ள பெய்ரா ஏரியின் சுற்றுபுற பகுதி  கொழும்பு  விமானப்படைதள  மற்றும் புறநகர் பகுதிகள் , கொழும்பு  தேசிய வைத்தியசாலை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகள் என்பன துப்பரவு செய்யப்பட்டன.

மேலும் மேல் மாகாண ஆளுநரினால் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து  வடிகால் மற்றும் கால்வாய்கள் டெங்கு பரவும் அபாயம் உள்ள நீர்தேக்கங்கள் என்பவற்றுக்கு விமானப்படை  வீரர்களினால்  ட்ரோன் மூலம் இரசாயன  திரவம் தெளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .