2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இலங்கை அருங்காட்சியகத்துடன் ஒன்றிணைகிறார்கள்

Editorial   / 2023 பெப்ரவரி 20 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகமானது (MMCA இலங்கை), கல்வியை முதன்மைப்படுத்தும் ஒரு முன்முயற்சியாகும்.

 பொதுமக்கள், பாடசாலைகள், மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் இன்பத்திற்காக, நவீன மற்றும் சமகால கலைகளின் காட்சி,  ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது அருங்காட்சியகத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக உள்ளது.

உலகளாவிய ரீதியில் அருங்காட்சியகங்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு சூழலில், துடிப்பான செயற்பாட்டுத்திறன் கொண்ட இளம் தொழில்வல்லுநர்கள் இம் மிக முக்கிய நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்கிறார்கள். 2019ம் ஆண்டு தொடங்கிய MMCA இலங்கை நான்கு பணியாளர்களிலிருந்து 12 பணியாளர்களாக வளர்ந்துள்ளது.

இவ் வளர்ந்து வரும் இளம் தொழில்வல்லுநர் குழுவில், பிரமோதா வீரசேகர துணை எடுத்தாளுநர், கல்வி மற்றும் பொது நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர், சானுஜ குணாதிலக, எடுத்தாளுநர், கற்றல் மற்றும் பயிற்றுவித்தல் மற்றும் தினால் சஜீவ, துணை ஆய்வாளர் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள் தங்களின் MMCA இலங்கையில் பணியாற்றிய காலத்தை பற்றிய கருத்துகளை பகிர்ந்துகொள்கின்றனர்.

1. MMCA இலங்கையில் பணியாற்றிய முக்கிய தருணங்கள் எவை?

பிரமோதா: 2019ம் ஆண்டில் MMCA இலங்கையை ஸ்தாபித்து குழுவுடன் பணியாற்றியதிலிருந்து, முதல் கண்காட்சியான 'நூறாயிரம் சிறிய கதைகள்' இன்னொரு முக்கிய தருணமாகும். பொது நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் பின்னணியிலுள்ள எடுத்தாளுநர் முறைமைகள் மற்றும் பாடசாலை/பல்கலைக்கழக வருகைகளை ஒழுங்கு செய்வது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பாடசாலை வருகைகளில் நான் மறக்க முடியாதது, காதலர் தினத்தையொட்டி 60 முன்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சுற்றுப்பயணம் ஒன்றை 2020ல் ஒழுங்கு செய்ததாகும்.

சானுஜ: எமது வருகை கல்வியாளர்களைப் பற்றி வரும் நேர்மறையான கருத்துகள் மற்றும் பயிற்சி பணியாளர் இத் துறையிலேயே முன்னோக்கி செல்ல முடிவெடுத்தது எனக்கு முக்கிய தருணங்கள் ஆகும். கடந்த வருடத்தில் அருங்காட்சியக தீவிர பயிற்சியை சர்வதேச பயிற்றுவிப்பாளர்களுடன் முதன்முறையாக இணைந்து நடாத்தியது முக்கிய தருணங்களில் ஒன்றாகும்.

தினால்: அருங்காட்சியகத்தில் பயிற்சி பணியாளராக பணிக்கு இணைந்து பின்னர் முழு நேர பணியாளராகும் வாய்ப்பு கிடைத்தது மிக முக்கிய தருணம் ஆகும். பரந்த மனமும் நேர்மறையான சூழலைக் கொண்ட பணியிடம் மற்றும் மேலாளர்களின் வழிகாட்டுதலுக்கும் நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனது தனிப்பட்ட மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு MMCA இலங்கை பெரும்பங்கு வகிக்கின்றது.

2. உங்களது பொறுப்புகள் எவ்வாறு நீங்கள் பணிக்கமர்ந்த நாளிலிருந்து உருமாறியுள்ளன?

பிரமோதா: பணியின் முதல் வருடத்தில் இலங்கையின் மற்றும் கொழும்பின் கல்வி நிலைமையை ஆராய்ந்து அதற்கேற்ப அருங்காட்சியகத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வடிவமைப்பதாகும். எமது இரண்டாவது கண்காட்சியான 'சந்திப்புகள்' கண்காட்சியில் எனது பனி பொது நிகழ்ச்சிகளை பற்றியதாகும். வெகு விரைவில் நான் கணிசமான அளவு வள நபர்களுடனும் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட குழுக்களுக்கு பொது நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதாகும்.

சானுஜ: MMCA இலங்கையில் பணிபுரிய நான் 2021ம் ஆண்டின் நடுப்பகுதியில் விண்ணப்பித்து அருங்காட்சியகத்தின் கற்றல் மற்றும் பயிற்றுவித்தலின் முதலாவது துணை எடுத்தாளுநராக பணி உயர்வு கிடைத்தது. எமது அனைத்து பயிற்சி செயற்பாடுகளையும் ஆய்வு செய்து, மேற்பார்வை செய்தல் மற்றும் பரிசீலனை செய்தலாகும். மேலும் நீண்ட கால நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் மேலதிக கவனம் செலுத்தி வருகின்றேன்.

தினால்: MMCA இலங்கையில் வருகை கல்வியாளராக பணிக்கமர்ந்த ஆரம்ப காலங்களில் எனது பொறுப்புகள் விருந்தினர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை கையாளுவதாகும். பயிற்சி பணி காலத்தில், தயாரிப்பு காலங்களில் கலைப்படைப்புகளுடன் மேலும் ஊடாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது எனது முழு நேர பணியில், ஆய்வு செய்தல் மற்றும் தொகுப்புகளை வகைப்படுத்தலாகும். அருங்காட்சியகத்தில் எனது கடைமைகள் எவ்வாறு அதிகரித்துள்ளன என்பதை காணக்கூடியதாகவுள்ளது.

3. MMCA இலங்கையில் ஏன் பணியாற்ற விரும்புகின்றீர்கள்?

பிரமோதா: கலையைப் பற்றிய என் எண்ணங்களும் அருங்காட்சியகத்தின் அணுகுமுறையும் ஒருவகைப்பட்டவையாகும். அருங்காட்சியகத்தின் மிகப்பெரிய கனவான இலங்கையில் நவீன மற்றும் சமகால கலையை வளர்த்தல் மற்றும் முக்கிய குழுவின் முயற்சியில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அறிவைப் பகிர்தல் மற்றும் கற்றல் அனுபகவகங்களிலிருந்து மாணவர்கள், கலை கல்வியாளர்கள், சிறுவர்கள், சிந்திப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டது எனக்கு மிக முக்கிய உந்து சக்தியாகும்.

சானுஜ: அருங்காட்சியக கல்வி மற்றும் கற்பனை இட அமைப்பு டிஜிட்டல் உலகிற்கு மிகப்பெரிய சவாலாகும். எனக்கு அது பிடிக்கும். எனது தற்போதைய பொறுப்பான கற்றல் மற்றும் பயிற்சிவிப்பு எதிர்காலத்தை நோக்கியிருக்கும். ஆகையால், MMCA இலங்கையின் கலாசார மற்றும் பொருளாதார நிறுவன அமைப்பிற்கு பங்களித்ததை எண்ணி பெருமையடைகின்றேன்.

தினால்: ஆரம்பத்தில் கலையில் எனக்கு பெரிய ஈடுபாடு இருக்கவில்லை ஆனால் அருங்காட்சியகத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்த பின்னர் இத்துறையில் எவ்வளவு தூரம் நான் முன்னேற முடியும் என்பதை அறிந்துகொண்டேன். ஆகையால், எனது திறமைகளை வளர்த்துக்கொண்டு ஒரு நாள் இவ் அருங்காட்சியகத்தின் எடுத்தாளுனர் ஆவேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .