2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

அவுஸ்ரேலியாவில் பரதநாட்டிய அரங்கேற்றம்

R.Tharaniya   / 2025 மார்ச் 16 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அவுஸ்ரேலியா மெல்போனில் அமைந்துள்ள பரதநாட்டிய நடனாலய அகாடமியின் முன்னணி மாணவியான பவித்ரா கணநாதனின் பரதநாட்டிய அரங்கேற்றம் அவுஸ்ரேலியாவின் Drum Theatre Dandenong இல் மார்ச் மாதம் 23 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக தமிழகத்திலிருந்து திருமதி பிரியதர்ஷினி கோவிந்த, இலங்கையிலிருந்து  சிரேஷ்ட பத்திரிக்கையாளரும் வெளியீட்டாளருமான எச்.எச்.விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

மெல்போர்னில்அமைந்துள்ள பரதநாட்டியக் கலைப்பள்ளியான நடனாலய அகாடமியின் நிறுவுநர் மீனா இளங்குமரன்.

இந்தக்கலைப்பள்ளி 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, பல்வேறு தலைமுறைகளுக்குப் பரதநாட்டியத்தை பயிற்று வித்து வருகிறது.மீனா, தனது நடனப்பயணத்தை ஐந்து வயதில் குருஜெயாசக்திவேலின் வழிகாட்டுதலால் தொடங்கினார்.

அவரது திறமை 1982 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தேசியமட்ட நடனப் போட்டியில் முதலிடம் பெற்று கல்வித்துறை வழங்கிய தங்கப்பதக்கம் பெற்றார்.கொழும்பிற்கு குடிபெயர்ந்த பிறகு, கலாசூரி ஸ்ரீ மதி வாசுகி ஜெகதீஸ்வரன் நாட்டியக்கலாமந்திர அகாடமியில் பரத நாட்டியபயிற்சியை மேம்படுத்தினார்.

கலைத்திறனை பாராட்டி, சரஸ்வதி பாயா என்ற தனது குருவின் பள்ளியில் நடன ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். 1990 ஆம் ஆண்டு இலங்கை நாட்டின் ஜனாதிபதியால் சிறப்பு  விருது வழங்கப்பட்டது.

அவர் பரத நாட்டியத்தில் டிப்ளமோபெற்றதுடன் வட இலங்கை சங்கீத சபையின் நடன ஆசிரியர் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தபிறகு, மீனாMonash மோனாஷ் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் பட்டம் பெற்றார். அதன் போது, பரத நாட்டியத்தின் பாரம்பரியத்தை க் காக்கும் நோக்கில்,1994ஆம் ஆண்டு நடனாலயா அகாடமியை தொடங்கினார். அதன் பிறகு  , அகாடமி வளர்ச்சியடைந்து, தரமான நடன நிகழ்ச்சிகளையும் புதிய தலை முறை கலைஞர்களுக்கான தொழில்முறை பயிற்சிகளையும் வழங்கிவருகிறது.

இதுவரை 21 மாணவர்கள் தனது வழிகாட்டுதலின் கீழ் அரங்கேற்றம் முடித்துள்ளனர், மேலும் அவர்களில் சிலர் அகடமியில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.  இவர், சென்னையில் அமைந்துள்ள பிரயத்னம் தேர்வுக் குழுவின் பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களை நடைமுறையில் மற்றும் கோட்பாடுகளிலும் சிறந்து வளரச் செய்துள்ளார்.

மீனா தனது மாணவர்களை தேசிய மற்றும் சர்வதேச மேடைகளில் நடனமாட வழிவகுத்துள்ளார். அவரது அகடமி சாந்தசொருபி, குமாரசம்பவம், கிருஷ்ணாவதாரம், நவரசசிவசக்தி, சிலப்பதிகாரம், தசாவதாரம், சூரசம்ஹாரம், சிவலீலை போன்ற பல் வேறு பரத நாட்டிய நாடகங்களை மேடை யேற்றி, பாரம்பரிய மற்றும் நவீன நடனங்களை உலகளவில் வழங்கியுள்ளது. சென்னையில் மைலாப்பூர் ஃபைன்ஆர்ட்ஸ், பிரம்மகானசபா, கார்த்திக் ஃபைன்ஆர்ட்ஸ், கிருஷ்ணாகானசபா, இந்தியன் ஃபைன்ஆர்ட்ஸ், பார்த்தசாரதி சுவாமி சபா போன்ற முக்கிய சபாக்களில் நடனமாட அவரது மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

2017ஆம் ஆண்டு, நடனஞ்ஜலி விழாவின் போது, சிதம்பரம், தஞ்சை, மயிலாடுதுறை, மயூரநாதர் கோவில் போன்ற புனிததலங்களில் நடன அர்ப்பணிப்புகளை நிகழ்த்தினர். 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் ,அவர் பயிற்று வித்த மாணவர்கள் அவுஸ்திரேலியன் இந்தியன் ஸ்காட்டேலண்ட் போட்டியில் மூத்த பிரிவில் முதலிடம் மற்றும் இடைநிலை பிரிவில் முதல், இரண்டாம் இடங்களை பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இந்திய பாரம்பரிய கலைகளுக்காக அவரது செய்த பங்களிப்பை  போற்றும் விதமாக, 2010 ஆம் ஆண்டு விக்டோரிய அரசால் வழங்கப்படும்Multi Cultural Awardசிறப்புப்பாராட்டுவிருதைபெற்றார். மேலும்,

2015 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் அவருக்கு“மயூரநாட்டுவாங்கநன்மணி”என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.மீனா இந்தியாவின் முன்னணி நடனகலை ஞர்களுடனும் இணைந்து பல் வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X