2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ACUMLYF இன் பொன்விழா

Freelancer   / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொன்விழா நிகழ்வும் 50 ஆவது வருடாந்த மாநாடும் (29) ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9:00 மணிக்கு கொழும்பு 07 விளையாட்டுதுறை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 

குறித்த  நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன கலந்து கொள்ளவுள்ளதோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் விசேட அதிதிகளாக இந்திய பாராளுமன்றத்தின்(லோக்சபா) முன்னாள்உறுப்பினரும் இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் மற்றும் தமிழ் நாடு,இராமநாதபுரம் தொகுதி இந்திய பாராளுமன்ற(லோக்சபா) உறுப்பினர் கே.நவாஸ் கனி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .